அரசுப் பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு அபாகஸ் கற்றல் கருவிகள் வழங்கப்பட்டன

சென்னை கலாம் அறப்பணி நல் இயக்கத்தின்  சார்பில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர்  அரசுப் பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு அபாகஸ் கற்றல் கருவிகள்  வழங்கப்பட்டன..  நிகழ்ச்சிக்கு  மணிகண்டம் வட்டாரக்கல்வி அலுவலர் கா.மருதநாயகம் முன்னிலை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் பூ.ஜெயந்தி வரவேற்றுப் பேசினார்..

கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் நிறுவனர் தலைவர்  சுதா கூறியதாவது:  கலாம் அறப்பணி நல் இயக்கமானது அக்டோபர் 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு திருச்சி கரூர்,காஞ்சிபுரம்,ராமநாதபுரம்,புதுக்கோட்டை ,சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு விருதும் அபாகஸ் உபகரணங்களும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கி கொண்டிருக்கிறோம்.எங்களது முக்கிய நோக்கம் நேர்மறை எண்ணங்களை அரசுப் பள்ளி மாணவர்களிடம் விதைக்க வேண்டும் மற்றும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.கலாம் அய்யா விட்டுச் சென்ற பாதையில் தொடர்ந்து  செயல்பட வேண்டும் என்பதே என்றார்..

விழாவில்  ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவர்களுக்கு இந்தியன் அபாகஸ் உபகரணங்கள் மற்றும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.

விழாவில் கலாம் அறப் பணி நல் இயக்க செயலாளர் பார்த்தசாரதி, இ.புதூர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவி பத்மாவதி,அபாகஸ் பயிற்றுநர் சாந்தி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் காளீஸ்வரி,கிராமக்கல்விக் குழுத்தலைவர் முத்துச்செல்வம்,பெற்றோர் ஆசிரியர்  கழகத் தலைவர் மணிவண்ணன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை புஷ்பலதா நன்றி கூறினார்.

முன்னதாக அறக்கட்டளையின் சார்பில் பள்ளியின்ஆசிரியருக்கு பட்டுக்கோட்டையில் உள்ள இந்தியன் அபாகஸ் பயிற்சி மையத்தில் இரண்டு நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

ACTIVITIES
USEFUL LINK

An ISO 9001:2015 Certified Institution.

The Objective of the product

and program is to enhance the brain power of the children through image memory and remove the fear of Mathematics by making the arithmetic calculations easier.

  • ISO 9001 : 2008 Certified
  • Black Facebook Icon
  • Black Twitter Icon
  • Black YouTube Icon
  • Black Instagram Icon
  • Black LinkedIn Icon
  • Black Google Places Icon

 Your email address is 100% safe to us