அபாகஸ் பயிற்சியின் போது தனித்திறமைகள் Multi tasking
Dear Abacus Tutors / Teachers,
அபாகஸ் பயிற்சியின் போது தனித்திறமைகள் உள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்றவாறு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை மல்டி டாஸ்கிங் (Multi Tasking) செய்ய தயார் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவர்கள் அபாகஸ் பயிற்சியை செய்து கொண்டே அவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவதும் தற்போது சிறப்படைந்து கொண்டு வருகிறது,
எனவே அவர்கள் செய்யும் தனி ஸ்பெஷல் திறமைகளை வெளி கொண்டு வருவதற்கு அபாகஸ் பயிற்சி அளித்துக் கொண்டு அவர்களுக்கு அவர்களின் தனி திறமைகளை வெளிக் கொண்டு வர வேண்டும் இதனால் அவர்கள் மல்டி டாஸ்கிங் செய்யக்கூடிய மாணவர்களாக ஆகிவிடுவார்கள். இது போல் பலவிதமாக அவர்களுக்கு தெரிந்த தனி திறமைகளை செய்து கொண்டு அபாகஸ் பயிற்சியில் உள்ள மனக்கணக்கு செய்யும்படி பயிற்சி கொடுத்தால் மாணவர்கள் இரண்டு செயல்களையும் ஒரே சமயத்தில் செய்யக் கூடியவர்களாக ஆகிவிடுவார்கள். இது தற்போது நமது அபாகஸ் பயிற்சி செய்யக்கூடியவர்கள் செய்யக்கூடிய சிறப்பு பயிற்சியாக நமது எல்லா அபாகஸ் பயிற்சி மையங்களில் பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார்கள், நீங்களும் இதை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது
உதாரணமாக அவர்கள் ஸ்கிப்பிங் செய்யக் கூடியவர்களாக இருந்தால் ஸ்கிப்பிங் செய்து கொண்டே மெண்டல் சம்ஸ் (Mind Math) பயிற்சி கொடுத்து இரண்டு செயல்களையும் ஒரே சமயத்தில் செய்யும்படியாக பயிற்சி அளிக்கலாம். அல்லது அவர்கள் சிலம்பம் செய்யக் கூடியவர்களாக இருந்தால் சிலம்பம் செய்து கொண்டே மெண்டல் சம்சு செய்யலாம் இதனால் அவர்கள் மல்டி டாஸ்கிங் செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
மேலும் குறிப்பாக இந்த பயிற்சியை செய்து தயாராக இருப்பவர்கள் எதிர்வரும் (24.06.2023) நமது அபாகஸ்Math ஒலிம்பியாட் காம்படிஷன் – 2023 ல், (Abacus Math Olympiad 2023) கலந்து கொள்ளலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, மேலும் இவ்வருடம் முதல் மல்டி டாகிங் (Multi Tasking) செய்யக்கூடியவர்களுக்கும் அகில இந்திய அளவில் / உலக அளவில் போட்டி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
Comentários